பீம்தால் ஏரியின் இறுதியில், 40 அடி உயர `விக்டோரியா' அணை உள்ளது. அணையின் இரு புறங்களிலும் படிமுறையில் அமைந்த மலர் தோட்டங்கள் காணப்படுகின்றன. இந்த அணை சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் இயற்கை காட்சிகளை வாரி வழங்குகிறது.
இவ்வணையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கின் கரைகளில் அழகான காட்டு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இக்காட்சியானது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. பாண்டவர்களால் கட்டப்பட்ட பீமேஸ்வரர் ஆலயம், இந்த அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications