போபாலின் பிரமிக்கத்தக்க மசூதியான ஜும்மா மசூதி குடிசியா பேகம் என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டதாகும். சிறிய இடமாக இருந்தாலும், கவர்ச்சியான கட்டிடக்கலையையும், பல்லாண்டு காலமாக சிறந்த வகையில் பராமரிக்கப்பட்டு வரும் இடமாகவும் இது உள்ளது.
இந்த இடத்தின் கட்டிடக்கலை சிறப்பினை காண்பதற்காகவே பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மசூதிக்கு வந்து செல்வது வழக்கும். இந்த மசூதியின் சிறந்த அம்சமாக, வெகு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள இரண்டு கோபுரங்கள் உள்ளன.
இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள மசூதிகளில் ஒன்றாக இது உள்ளது; இதன் வளைவுகளும், தூண்களும் இந்த மசூதியின் கட்டிடக்கலை சிறப்பிற்கு சான்றாக உள்ளன.
உள்ளூர் மக்களால் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த மசூதிக்கு வெள்ளிக்கிழமைகளில் பெருந்திரளான கூட்டமாக வந்து மக்கள் பிரார்த்தனை செய்து செல்வது வழக்கம்.



Click it and Unblock the Notifications