அப்பர் லேக்-கிற்கு அருகில் உள்ள லோவர் லேக்கிலும் கமலா பார்க்கின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்த அழகிய ஏரி வாயைப் பிளக்க வைக்கும் அழகை கொண்ட இடமாகும்.
சாகசத்தை விரும்புபவர்கள் இந்த ஏரியில் சில நீர் சாகச விளையாட்டுக்களையும் விளையாட முடியும். அப்பர் லேக் பகுதியைப் போலவே, லோவர் லேக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்ற இடமாக உள்ளது.
இந்த இரண்டு பெரும் ஏரிகளை கொண்டிருப்பதன் காரணமாகவே போபால் ஏரிகளின் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. எனினும், வெகு வேகமாக இந்த ஏரியைச் சுற்றிலும் உருவாகி வரும் மனிதகுல ஆக்கிரமிப்புகளால் இவற்றின் அழகு குலைந்து மற்றும் குறைந்த வருகிறது.
மத்தியப் பிரதேச அரசு இந்த ஏரியின் அழகை மீட்டெடுக்க முயன்று வந்தாலும், அதற்கு உள்ளூர் மக்களின் ஆதரவு வேண்டும் என்பது நிதர்சன உண்மையாக உள்ளது.



Click it and Unblock the Notifications