தேராஸ் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் புபனேஷ்வர் நகரின் எல்லைப்பகுதியில் சந்தகா தேசியப்பூங்காவை ஒட்டி உள்ளது. இது ஒடிஷா மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய அணையாக அறியப்படுகிறது.
இந்த அணைப்பகுதியின் இயற்கை அழகு மனம் மயக்கும் எழிலுடன் காட்சி அளிக்கிறது. எனவே பயணிகள் இப்பகுதியின் நிசப்தமான சூழலில் ஏகாந்தமாக பொழுதைக்கழிக்க விரும்புகின்றனர்.
மழைநீர் தேக்கப்பட்ட ஒரு நீர்த்தேக்கமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. அணைக்கு அருகேயுள்ள ஒரு மலையுச்சியில் காட்டேஜ் தங்குமிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பது எளிதாக உள்ளது. இந்த காட்டேஜ் அமைப்பில் வசிப்பிட வசதிகள் யாவும் கொண்ட மூன்று குடில்கள் இடம் பெற்றுள்ளன.
அணையைச்சுற்றி 40 கி.மீ தூரத்துக்கு காட்டுச்சுற்றுலா வசதியும் பயணிகளுக்காக வழிகாட்டிகள் துணையுடன் அளிக்கப்படுகிறது. பகல் பொழுதை அணைப்பகுதியில் கழித்துவிட்டு இரவில் இங்குள்ள குடிலில் தங்கி ஓய்வெடுக்கலாம். தேராஸ் அணைப்பகுதி வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்வதற்கேற்ற சூழலைக்கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications