ஐ.எம்.எஃப்.ஏ பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள பூங்காக்களிலேயே மிக அழகான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது சாஹித் நகர் பகுதியில் அமைந்துள்ளது. எல்லா பூங்காக்களையும் போலவே இது மக்கள் அமைதியாக ஓய்வெடுக்க உதவும் இயற்கை ஸ்தலமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
ரம்மியமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த பூங்காவில் பசுமையான புல்வெளிகள், மலர்ச்செடிகள் மற்றும் இதர தாவரங்கள் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இந்த பூங்காவில் வசதிகள் உண்டு.
இங்குள்ள கூடைப்பந்து மைதானம் நல்ல இளம் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிக்களமாக விளங்குகிறது. அமைதியான சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பும் உள்ளூர் மக்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். குழந்தைகள் விருப்பத்துடன் விளையாடி மகிழும் இடமாகவும் இது விளங்குகிறது.



Click it and Unblock the Notifications