புபனேஷ்வர் நகரில் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களில் இந்த கரவேலா பார்க் என்றழைக்கப்படும் பூங்காவும் ஒன்று. அழகிய நடைபாதைகள், ஓட்டப்பாதைகள், அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான பெஞ்சுகள் என்று இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன.
பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அலங்காரமான மலர்ச்செடி அமைப்புகள், பல்வேறு தாவரங்கள், பச்சை வேலிகள், நீர்த்தெளிப்பு அமைப்புகள், தடாகங்கள் போன்றவை இந்த பூங்காவில் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
நகரத்தை சுற்றிப்பார்த்து களைப்படைந்த பயணிகள் இந்த பூங்காவில் சற்று ஓய்வெடுக்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
புபனேஷ்வர் நகர வளர்ச்சி ஆணையம் இந்த பூங்காவை தனது பராமரிப்பில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் இந்த பூங்கா திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications