தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் எனப்படும் இந்த அருங்காட்சியகம் டிரைபல் மியூசியம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. புபனேஷ்வர் நகர ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இந்த மியூசியம் அமைந்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த மியூசியத்தில் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மியூசியம் டிரைபல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் பழங்குடி ஆராய்ச்சி மையமாகவும் இயங்கி வருகிறது.
அதாவது பழங்குடி மக்கள் தொடர்பான பல்வேறு இந்த மையத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் 60 வகையான பழங்குடி இனக்குழுக்கள் வசிப்பதாக இம்மையத்தின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் மரச்சிற்பங்கள், உலோகப்பொருட்கள், துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவற்றை பயணிகள் பார்க்கலாம்.
ஒரு நூலகம் மற்றும் ஒரு சிறிய விலங்குக்காட்சியகம் போன்றவையும் இந்த அருங்காட்சியக வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இது பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. இதன் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.



Click it and Unblock the Notifications