ஹிந்து யாத்ரீகர்கள் மத்தியில் இந்த பழைய புபனேஷ்வர் நகரம் வெகு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக புகழ் பெற்றுள்ளது. தொன்மையான பல முக்கிய கோயில்கள் இந்த நகர்ப்பகுதியில் அமைந்திருப்பதே இதற்கு காரணம்.
இவை புபனேஷ்வர் நகரத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட கோயில்களின் தொகுப்பாக கருதப்படுகின்றன. 11ம் நூற்றாண்டு தொடங்கி 13 ம் நூற்றாண்டு வரை இந்த கோயில்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் இந்த கோயில் ஸ்தலங்களிலேயே கிடைத்துள்ளன.
இந்த தொகுப்புகளில் சுமார் 400 கோயில்கள் இடம் பெற்றுள்ளன என்பதும் ஒரு அதிசயமான உண்மையாகும். வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு தனித்தன்மையான அம்சங்களுடன் இந்த கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான கோயில்கள் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டிருக்கின்றன என்பதும் மற்றொரு முக்கியமான தகவலாகும். டிராஃபிக் மஹாதேவ் எனும் ஒரு சிறிய கோயில் இங்குள்ள ஒரு சுவாரசிய அம்சமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது. இது சாலையின் நடுவே அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications