ஒரிசா ஸ்டேட் மியூசியம் எனப்படும் இந்த மாநில அரசு அருங்காட்சியகம் புரஃபசர் கன்ஷியாம் டாஷ் மற்றும் ராவென்ஷா கல்லூரியை சேர்ந்த புரஃபெசர் என்.சி. பானர்ஜி ஆகியோரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மியூசியத்திற்கான தொல்பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் 1932ம் ஆண்டிலிருந்து இவர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் 1938ம் ஆண்டில் ஒடிஷா அரசாங்கம் இதனை தனது கட்டுப்பாட்டிற்குள் ஏற்றுக்கொண்டது. அக்காலத்தில் இது புரவின்சியல் மியூசியம் என்று அழைக்கப்பட்டது.
முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு நாளடைவில் பெருகி இது பிரசித்தமான ஒன்றாக மாறியது. இங்குள்ள சேகரிப்புகளில் சிலைகள், நாணயங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோகப்பொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கட்டக் பகுதியில் அமைந்திருந்த இந்த மியூசியம் 1947-48ம் ஆண்டுகளில் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. 1960ம் ஆண்டிலிருந்து இந்த மியூசியம் ஒரிசா ஸ்டேட் மியூசியம் என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications