பிப்லி எனும் இந்த கிராமம் புபனேஷ்வர் நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. அலங்கார பொதிப்பு செய்யப்பட்ட பல்வேறு கைவினைக்கலை பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றில் கைப்பைகள், குடைகள், காலணிகள், உடைகள், சுவர் அலங்கார தொங்கிகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள், படுக்கை விரிப்புகள் போன்றவை அடங்கும்.
இருப்பினும் பிப்லிக்கு வருகை தரும் பயணிகளை முதலில் கவர்வது இங்கு பல்வேறு வண்ணங்களில் காட்சி தரும் அலங்கார குடை அமைப்புகளாகும். பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த அலங்கார குடைகள் இங்கு தயாராகின்றன.
அக்காலத்திய ஒடிஷா மன்னர்களும்கூட இந்த இந்த குடைத்தயாரிப்பு கலையை வெகுவாக ஆதரித்து வந்துள்ளனர். இந்த கைவினைக்கலை நுணுக்கங்கள் இப்பகுதியில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
பூக்கள், பறவைகள், மரங்கள் மற்றும் சூரியன் போன்ற உருவங்கள் பொதிக்கப்பட்ட இந்த இந்த அலங்காரக்குடை அமைப்புகள் மற்றும் கூரைத்தொங்கிகள் கண்வரும் வண்ணங்களில் ஏராளமாக இந்த கிராமத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
பெரும்பாலும் வெவ்வேறு வகையான துணி மற்றும் அலங்காரத்துக்கான சிறு கண்ணாடித்துண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. புபனேஷ்வர் நகரத்துக்கு விஜயம் செய்து திரும்பும்போது ஞாபகார்த்த பொருட்கள் வாங்க விரும்பும் பயணிகள் இந்த கிராமத்துக்கு வருகை தருவது அவசியம்.



Click it and Unblock the Notifications