உதயகிரி & கண்டகிரி குகைகள் புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். புபனேஷ்வர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இரட்டை மலைகள் சாந்தமான சூழலின் நடுவே வீற்றிருக்கின்றன.
முற்காலத்தில் இந்த மலைகளில் புகழ்பெற்ற ஜைன மடாலயங்கள் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மலைகளின் உச்சிப்பகுதியில் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவறை குகைகள் காணப்படுகின்றன.
இந்த குகை அமைப்புகளை இன்றும் பயணிகள் பார்க்கலாம். இவை கி.மு 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குகைகள் சிலவற்றில் சில சிற்பப்பொறிப்புகளும் காணப்படுகின்றன. ராணி கும்பா எனப்படும் இரண்டு அடுக்கு கொண்ட குகை அமைப்பும் இந்த அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது.
இந்த ராணிகும்பா குகையில் விரிவான அலங்கார சித்திரப்பொறிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மற்றும் ஒரு பெரிய குடைவறை அமைப்பு யானைக்குகை அல்லது ஹாத்தி கும்பா என்று அழைக்கப்படுகிறது. மொத்தமாக உதய்கிரி மலையில்18 குடைவறை அமைப்புகளும் கண்டகிரி மலையில் 15 குடைவறை அமைப்புகள் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications