19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும்.
ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே சுகே சனம், லகான் மற்றும் இவற்றிற்கு முன் வெளிவந்த சில குஜராத்தி திரைப்படங்கள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.
எனினும், 2001 இல் நிகழ்ந்த நிலநடுக்கங்களாலும், 2006 இல் நிகழ்ந்த கொள்ளையின் போது, கொள்ளையர்கள் பெருமதிப்புடைய ஏராளமான கலைப்பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாலும் இந்த மாளிகை மிகுந்த சிதைவுக்குள்ளாகியுள்ளது.
ஆனாலும், இது பொதுமக்கள் வந்து பார்வையிடும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிரதான அரண்மனைக் கூடத்தை சென்று பார்க்கலாம்; மேலும், இந்த நகரின் கொள்ளை கொள்ளும் அழகை முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடியதான மணி கோபுரத்துக்கும் சென்று பார்க்கலாம்.
இரண்டாம் ராவ் பிரக்மால்ஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட பிரக் மஹால், 1865 ஆம் ஆண்டில், அப்போதே சுமார் 3.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications