Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீஜாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ககன் மஹால்

ககன் மஹால், பீஜாப்பூர்

40

ககன் மஹால் என்றழைக்கப்படும் இந்த அரச அரண்மனை பீஜாப்பூரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முதலாம் அலி அடில் ஷா மன்னரால் 1561ம் ஆண்டில் ராஜகுடும்ப இருப்பிடம் மற்றும் ராஜாங்க சபைக்கூடத்துக்காக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

21 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையின் முகப்பு நான்கு பிரம்மாண்ட மரத்தூண்களையும் மையத்தில் ஒரு அலங்கார விதான வளைவையும் கொண்டுள்ளது. அரண்மனையின் முதல் தளம் ராஜகுடும்பத்திற்கும் கீழ்த்தளம் ராஜாங்க சபைக்கூடத்திற்கும் பிரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த வரலாற்றுச்சின்னத்தின் மையத்தில் உள்ள அலங்கார வளைவானது பிஜாப்பூரில் உள்ளவற்றிலேயே அகலமாகவும் உயரமாகவும் காணப்படுகிறது. பெரும்பாலும் இடிபாடுகளுடன் காணப்படும் இந்த அரண்மனை ஸ்தலம் தற்பொது ஒரு பூங்காவின் மத்தியில் ஒரு அங்கமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து பார்க்கும் பொது மக்களுக்கு சபை நிகழ்வுகள் தெளிவாக தெரிவதற்கேற்ப ஒரு புறத்தில் முழுதும் திறந்திருக்கும் வகையில் ராஜசபைக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. அற்புதமான வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் இந்த ககன் மஹால் அழகிய கொத்தளங்களாலும் அகழியாலும் சூழப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue