Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீஜாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஆஸார் (மித்தாரி) மஹால்

ஆஸார் (மித்தாரி) மஹால், பீஜாப்பூர்

40

பீஜாப்பூருக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றுமொரு வரலாற்று நினைவுச்சின்னமாக இந்த ஆஸார் (மித்தாரி) மஹால் விளங்குகிறது. பாரசீக அலங்காரக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாளிகை 1640ம் ஆண்டுக்கு பின்னர் முஹம்மத் அடில் ஷா மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

இது முகலாயர் காலத்தில் நீதி மண்டபம் அல்லது கூடமாக திகழ்ந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு விஜயம் செய்ய பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்ததுடன் இந்தக்கூடத்தில் காலங்காலமாக விழா ஒன்றும் இன்று வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

நான்கு தூண்களின் மீது அமைந்துள்ள இந்த மண்டபம் இஸ்லாமிய தொழுகை ஸ்தலமாக விளங்கியுள்ளது. இந்த மண்டப வளாகத்துக்குள் மூன்று நீர்த்தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுவர் ஓவியங்களும் சிற்பக்கலை அம்சங்களும் காணப்படுகின்றன.

மூன்று தடாகங்களில் ஒன்று 15 அடி ஆழத்துடன் அளவில் பெரியதாகவும் மற்ற இரண்டும் சிறியதாகவும் காணப்படுகின்றன. இந்த மண்டபத்தில் பாரசீக கலையம்சங்கள் நிரம்பியுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க விசேஷமாகும். ஒவ்வொரு வருடமும் உருஸ் திருவிழா இங்கு மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது.அஸார் மண்டபத்தில் பயணிகள் ஒரு கோட்டை கொத்தளத்தையும் பார்க்கலாம். இது இஸ்லாமிய ஆட்சிக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri