Search
  • Follow NativePlanet
Share

பிந்து - முழுமையான வெளியுலகச் சுற்றுலா!

7

இந்திய எல்லையில் இருக்கும் கடைசி கிராமம் என கருதப்படும் பிந்து, இந்திய-பூட்டான் எல்லையில் உள்ளது. இக்கிராமத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆச்சரியமூட்டுபவையாக உள்ளன.

இங்கிருந்து பூடானுக்கு செல்லும் முயற்சியையும் பயணிகள் மேற்கொள்ளலாம். மிகவும் அழகான அவ்விடத்திற்கு செல்லும் வழியெங்கும் பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டங்களும், அமைதியான கிராமங்களும் அமைந்திருக்கின்றன.

உண்மையான வெளியுலக சுற்றுலாவில் ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக பிந்து விளங்குகிறது. இங்கு கூடாரமிட்டு தங்கி பொழுதைக் கழிக்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்  

இக்கிராமத்தினூடே ஓடும் ஜல்தகா ஓடை பிந்துவின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும். புகைப்பட ஆர்வலர்கள் அருமையான இயற்கை காட்சிகளை புகைப்படம் பிடிக்க இங்கு வரலாம்.

ஜல்தகா நீர்மின் நிலையம் பெரிதும் நம்பியிருக்கும் ஜல்தகா நதியில் அமைந்திருக்கும் பிந்து அணை மிகவும் அழகான தோற்றத்துடன் விளங்குகிறது.

பிந்துவில் மலையேற்றம்

டொடே முதல் டங்க்டா வழியாக நெரொரா பள்ளத்துக்கு பூங்கா வரையிலான சிறிய மலையேற்ற வசதிகளை சில குழுக்கள் இங்கு ஏற்பாடு செய்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் கல்ம்பொங் என்னுமிடத்தில் அவை அமைந்துள்ளது.

தங்குமிடம் மற்றும் கடைவீதிகள்

பிந்துவில் இருக்கும் சில விடுதிகள் வசதியான தங்குமிடங்களாக திகழ்கின்றன. பயணிகள் இங்கு ஒருநாள் தங்கிவிட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். சிவாஜி இன் எனப்படும் விடுதி சிறந்த சுற்றுலா தொகுப்புகளை வழங்குகிறார்கள்.

உள்ளூர் சந்தை ஒன்றில் பாரம்பரிய பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும் விமான வசதி இருக்கும் சிலிகுரியில் இருந்து பிந்து 3மணி நேர தொலைவில் உள்ளது.

பிந்து வானிலை

அக்டோபர் மாதத்திற்கு மேல் பிந்து செல்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

பிந்து அடையவது எப்படி

சாலைவசதிகள் சிறந்தமுறையில் இருந்தாலும், விமான மற்றும் ரயில் சேவைகளுக்கு சிலிகுரிக்குதான் செல்லவேண்டும்.

பிந்து சிறப்பு

பிந்து வானிலை

சிறந்த காலநிலை பிந்து

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பிந்து

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 31 மற்றும் 31சி ஆகியவற்றில் மூலம் சிலிகுரியில் இருந்து 103கிமீ தொலைவில் உள்ள பிந்துவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிலிகுரி ரயில்நிலையத்தில் இருந்து ஏனைய நகரங்களுக்கு ரயில் வசதி உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிலிகுரி விமானநிலையத்தில் இருந்து இந்தியாவின் பெருநகரங்களுக்கு விமானசேவை உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon