பொதுவாக தஹானு-போர்டி பீச் என்று அறியப்படும் இந்த கடற்கரை போர்டி கிராமத்தில் உள்ளது. மாசடையாத ஏகாந்தமான காட்சிச்சூழல் அழகை இது பெற்றுள்ளது. சுமார் 17 கி.மீ தூரத்துக்கு தஹானுவிலிருந்து போர்டி வரை இந்த அற்புதக் கடற்கரை பிரமிக்க வைக்கும் எழிலுடன் அமைந்துள்ளது.
பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. நீச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த கடற்கரையில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இடுப்பளவு மாத்திரமே கடல் நீர் மட்டம் காணப்படுகிறது.
பிசுபிசுப்பான கறுப்பு மணலுடன் காணப்படும் இந்த கடற்கரையை ஒட்டியே சப்போட்டா மரங்கள் (தோப்பு) வரிசையாக வளர்ந்துள்ளன.
இந்த கடற்கரையில் நிலவும் அசாதாரண அமைதிக்காகவே இது அதிக பிரசித்தமாய் அறியப்பட்டுள்ளது. எந்த விதமான செயற்கை அழகூட்டல் அம்சங்களையும் கொண்டிராத இந்த கடற்கரைக்கு பயணிகள் திரும்ப திரும்ப வருவதற்கு ஆசைப்படுகின்றனர்.
மஹாராஷ்டிர தாவர (மர) பாதுகாப்புத் துறை இந்த கடற்கரையின் பராமரிப்புக்கும் நிர்வாகத்துக்கும் பொறுப்பேற்றுள்ளது.



Click it and Unblock the Notifications