இந்த மல்லிநாத் ஜெயின் தீர்த் கொஸ்பட் கோயில் ஜைன மதப்பிரிவில் குறிப்பிடப்படும் 24 தீர்த்தங்கரர் கோயில்களில் மிகப்பெரிய கோயிலாகும். போர்டி கிராமப்பகுதியில் பிரபாதேவி என்னும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ஜைன ஐதீகத்தின் படி இந்த மல்லிநாத் ஜெயின் தீர்த் கொஸ்பட் கோயில் ரிஷப் அல்லது ஆதிநாத் என்றழைக்கப்படும் கடவுளுக்காக கட்டப்பட்டுள்ளது. 24 ஜைன இறைத்தூதர்களில் இவர் முதலாமவராக ஜைனர்களால் பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.
அவர்களில் ஜைனத்தை உருவாக்கம் செய்த மஹாவீர பஹவான் 24ம் இறைத்தூதராக அறியப்படுகின்றார். இந்த கோயிலில் பின்பற்றப்படும் ஜைனச்சடங்குகள் தரிசிக்க வேண்டிய விசேஷமான பாரம்பரிய சடங்குகளாகும்.



Click it and Unblock the Notifications