காக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நாரா நாக் ஒரு அழகிய நீருற்று ஆகும். இது நரேன் நாக் என்றும் அழைக்கபடுகிறது. இந்த நீருற்றிற்கு தேவையான நீர் வரத்து டோஸாமெய்டன் ஏரியில் இருந்து கிடைப்பதாக நம்பப்படுகிறது.
பூமிக்கு அடியில் பல கிமீ தூரம் கடந்து சென்று இந்த நீருற்று ஏரியுடன் ஐக்கியமாகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே புராணங்களில் டோஸாமெய்டனுக்கும் நரா நாக் இடையே உள்ள தொடர்பை ஒரு துறவி இப்பகுதியில் பிரயாணம் செய்து கண்டு பிடித்தார் என்று சொல்லப்படுகிறது.
அவர் தற்செயலாக ஒரு செம்மறி ஆட்டு சாணம் நிறைந்த பையை டோஸாமெய்டன் ஏரியில் தவற விட்டு விட்டதாகவும் அது சில நாட்கள் கழித்து நாரா நாக்கில் அந்த பையை மிதந்தது கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் தனது சந்தேகத்தை உறுதி செய்து கொள்வதற்காக டோஸாமெய்டன் ஏரிக்கு சென்று சிறிது மஞ்சள் தூள் கலக்க, சிறிது நாட்களுக்கு பின்னர் நாரா நாக் நீருற்றின் நீர் மஞ்சளாக மாறியது அவரது நம்பிக்கை ஊர்ஜிதம் செய்தது.



Click it and Unblock the Notifications