சாதர் சால் எனும் மன்னரால் 1660ம் ஆண்டில் இந்த சாத்ரா மஹால் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவை முகலாயர் ஆண்ட காலத்திலேயே ராஜபுத்திர மன்னர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்திருந்தற்கான ஆதாரமாக திகழ்கிறது.
முகாலய பாணி சிவப்புப்பாறை கட்டமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த அரண்மனையை பூந்தி பிரதேச சுரங்கங்களிலிருந்து வெட்டப்பட்ட பாறைக்கற்களைக்கொண்டு சாதர் சால் மன்னர் எழுப்பியுள்ளார். இந்த அரண்மனையின் உட்பகுதியில் சுவர்ப்பூச்சு ஓவியங்களும் வெளிவாயில் பகுதியில் கண்ணாடி மற்றும் யானைத்தந்த வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications