17ம் நூற்றாண்டில் இந்திரசிங் ஹதா எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ள இந்த இந்திரகர் கோட்டை பூந்தி நகரத்திலிருந்து 77 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் மற்றும் நான்கு அற்புதமான நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்த கோட்டை ஒரு மலையில் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் உள்ளே ஜனனா மஹால், சுபாரி மஹால் மற்றும் ஹவா மஹால் போன்ற அரண்மனைகள் காணப்படுகின்றன. இந்த எல்லா அரண்மனைகளிலும் கலையம்சம் பொருந்திய சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. கமேலஷ்வர் கோயில் மற்றும் காளி கோயில் ஆகிய கோயில்களும் இந்த இந்திரகர் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications