நவால் சாஹர் எனப்படும் இந்த செயற்கை ஏரி பூந்தி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தாராகர் கோட்டையிலிருந்து இந்த ஏரியை நன்றாக பார்க்கலாம். ஒட்டுமொத்த பூந்தி நகரின் பிம்பமும் இந்த அமைதியான ஏரி நீரில் நிழலாக தெரிவது மிக அற்புதமான காட்சியாகும்.
சதுர வடிவில் காணப்படும் இந்த ஏரியில் ஒரு வருணபஹவான் கோயிலும் உள்ளது. பாதி ஏரியில் அமிழ்ந்தாற் போன்று கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் பல படிக்கிணறுகளும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications