Search
  • Follow NativePlanet
Share

சாந்தேரி – வரலாற்று மயக்கத்துடன் ஒரு சுற்றுலா!

26

மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின் எல்லையையொட்டி உள்ளது. இந்நகரம் பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் இயற்கை அதிசயங்களை காட்டவல்ல சுற்றுலாத்தலமாகும். பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட கானகங்கள் மற்றும் பேரமைதி வாய்ந்த ஏரிகள் ஆகியவற்றை அருகருகே கொண்டிருக்கும் இந்நகரம் செழிப்பு மிக்க விந்திய மலைகளிலே அமைந்துள்ளது. இந்நகரம் ஜான்சியிலிருந்து 103 கிமீ தொலைவிலும் மற்றும் போபாலில் இருந்து 214 கிமீ தொலைவிலும் உள்ளது.

சாந்தேரி : இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அதிசயம்!

இந்த பழமையான நகரம் 11-ம் நூற்றாண்டிலேயே உருவானது என்பதற்கு சான்றாக இந்நகரத்தின் நினைவுச் சின்னங்கள் நின்று கொண்டுள்ளன. மத்திய இந்தியா, தக்காணம் மற்றும் குஜராத்தில் உள்ள துறைமுகங்களுக்கு செல்வதற்கான முக்கியமான வியாபார வழியாக இந்நகரம் இருந்ததால் பல்வேறு அரசர்களும் இந்நகரத்தை கைப்பற்றி ஆண்டு வந்தனர்.

இங்கிருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்கள், இங்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்த இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன. மேலும், சாந்தேரி ஒரு முக்கியமான சமண தலமாகவும், இராணுவ குடியிருப்பாகவும் செயல்பட்டு வந்த நகரமாகும்.

சாந்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

சாந்தேரி கோட்டை, ராஜா மஹால், சிங்புர் அரண்மனை, பாதால் மஹால் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்ட பயணமாகவே சாந்தேரி சுற்றுலா இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஜக்கேஸ்வரி தேவி திருவிழா இந்நகரத்திற்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் திருவிழாவாகும். மேலும், சாந்தேரி நகரம் அதன் கைவினைப் பொருள் தொழில்களுக்காகவும், மிகவும் தரமான, தங்க ஜரிகை கொண்ட சேலைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

சாந்தேரியை அடையும் வழிகள்

அருகிலுள்ள நகரங்களிலிருந்து டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக சாந்தேரி நகரத்தை அடைந்திட முடியும். சாந்தேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற வகையில் சர்க்யூட் ஹெளஸ், டாக் பங்களா மற்றும் ரெஸ்ட் ஹெளஸ் போன்ற பல்வேறு விடுதிகள் உள்ளன. சாந்தேரிக்கு குளிர்காலங்களில் வருவது மிகச்சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.

சாந்தேரி சிறப்பு

சாந்தேரி வானிலை

சிறந்த காலநிலை சாந்தேரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சாந்தேரி

  • சாலை வழியாக
    மத்தியப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுடனும் சாலைப் போக்குவரத்து மூலம் சாந்தேரி நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. குவாலியர், போபால், இந்தூர், குணா, விதிஷா, சிவ்புரி, சாஞ்சி, அசோக் நகர், திக்காம்கார், ஜான்ஸி மற்றும் லலித்பூர் ஆகிய இடங்களிலிருந்து தொடர்ச்சியான இடைவெளிகளில் சாந்தேரிக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தனியார் டாக்ஸிகளும் வேறு பல நகரங்களிலிருந்து சாந்தேரிக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சாந்தேரிக்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களாக 36 கிமீ தொலைவில் உள்ள லலித்பூர் இரயில் நிலையமும் மற்றும் 124 கிமீ தொலைவில் உள்ள ஜான்ஸி இரயில் நிலையமும் உள்ளன. மேலும் 63 கிமீ தொலைவில் உள்ள அசோக் நகர் மற்றும் 38 கிமீ தொலைவில் உள்ள மங்கோலி ஆகிய இடங்களும் இரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரயில் நிலையங்களிலிருந்து சாந்தேரிக்கு பேருந்துகள் அல்லது டாக்ஸிகளில் செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சாந்தேரிக்கு அருகிலுள்ள விமான நிலையங்களாக 258 கிமீ தொலைவில் உள்ள போபால் விமான நிலையமும் மற்றும் 259 கிமீ தொலைவில் உள்ள குவாலியர் விமான நிலையமும் உள்ளன. போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகவும், குவாலியரில் உள்ள ராஜ்மாதா விஜய ராஜே சிந்தியா ஏர் டெர்மினல் தேசிய விமான நிலையமாகவும் உள்ளன. இந்த விமான நிலையங்களிலிருந்து சாந்தேரிக்கு பேருந்துகள் அல்லது டாக்ஸிகளில் செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue