சௌகோரியிலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள கங்கோலிகாட் எனும் இடத்தில் இந்த பிரசித்தமான மஹாகாளி கோயில் அமைந்துள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் சக்தி பீடம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.
இக்கோயிலில் பக்தர்களால் ஆடுகள் போன்றவை நேர்த்திக்கடனுக்காக பலியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஹாத் காளிகா மந்திர் என்று உள்ளூர் மக்களால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
ஹாத் காளிகா சந்தை எனப்படும் சந்தைத்திருவிழாவின் போது இப்பகுதி வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் வாத்தியக்கருவிகளின் முழக்கங்களால் நிரம்பி வழிகிறது.
இங்கிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள சாமுண்டா கோயிலுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். இரவு நேரத்தில் இக்கோயில் ஸ்தலத்தில் ஆவிகள் உலவுவதாக உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன.



Click it and Unblock the Notifications