காளிகாம்பாள் கோயில் சென்னை நகரத்தின் பாரீஸ் கார்னர் பகுதியில் பரபரப்பான தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ளது. காளி என்றும் காமாக்ஷி என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வத்துக்காக இந்தக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
1640ம் ஆண்டில் கடற்கரையை ஒட்டி இருந்த இதன் ஆதி அமைப்பு அழிக்கப்பட்டபின்னர் தற்போது நாம் காணும் இக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் இதன் ஆதி அமைப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உள்ளூர் புராணக்கதைகளின்படி முற்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இக்கோயிலின் தெய்வம் தற்போது சாந்த சொரூப காமாட்சி அவதாரமாக காட்சியளிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.



Click it and Unblock the Notifications