இந்த நார்னலா கோட்டை சிறந்த வரலாற்று முக்கியத்துவத்தை உடைய கோட்டையாகும். சிக்கல்தரா பிரதேசத்திலுள்ள இந்த கோட்டை கடுமையான பருவநிலையைத் தாங்கும் விதத்தில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெலியாகர், ஜஃப்ராபாத் மற்றும் இந்த நார்னலா என்ற இந்த மூன்று கோட்டைகளை உள்ளடக்கிய ஒரு கோட்டையே ஷாகனூர் கோட்டை ஆகும். நார்னலா கோட்டையானது அடர்ந்த காட்டின் நடுவே இயற்கை கொஞ்சும் பிரதேசம் நாலாபுறமும் சூழ்ந்திருக்க அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 973 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோட்டைகள் உருவான வரலாறு பற்றிய தகவல்கள் அறுதியிட்டு சொல்லமுடியாமல் உள்ளது. பல வரலாற்றாசிரியர்களும் பலவிதமாக வெவ்வேறு மன்னர்கள் மற்றும் ராஜவம்சங்களை சேர்ந்தவர்களை இந்த கோட்டைகளை உருவாக்கியவர்களாக குறிப்பிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications