Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » ஈர்க்கும் இடங்கள் » கோதண்டராமஸ்வாமி கோயில்

கோதண்டராமஸ்வாமி கோயில், சிக்மகளூர்

48

சிக்மகளூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மறக்காமல் இந்த கோயிலையும் தரிசிப்பது நல்லது. இந்த கோயிலில் வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் ஜாத்ரா திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்த பாரம்பரியச்சின்னம் மூன்று கால கட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோதண்ட ராமசாமி கோயில் ஹொய்சள வம்ச கட்டிடக்கலை பாணியிலும் சுகநாசி மற்றும் கர்ப்பக்கிருஹம் இரண்டும் திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.

இந்த யாத்ரீக ஸ்தலத்தை அடையும் பயணிகள் கோயிலுக்கு அருகில் ஒரு வறண்ட குளத்தையும் காணலாம். கோதண்ட ராமசாமி கோயிலின் மூல விக்கிரஹம் 14 ம் நூற்றாண்டிலும், முகமண்டபமானது 16ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டுள்ளது.

இதிலுள்ள வாசல் பகுதி 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிருஹத்தில் ராம் பஹவான், லட்சுமணன், சீதா தேவி ஆகியோரின் சிலையோடு ஹனுமான் பீடமும் காணப்படுகிறது.கோயிலின் பிரகாரப்பகுதியில் முத்துக்கிருஷ்ணர், யோகநரசிம்மர், ராமானுஜாச்சாரியார், தேசிகர், சுக்ரீவர், வேதாந்தா, மாதவா போன்ற சிற்பங்கள்  காணப்படுகின்றன.

பயணிகள் சுகநாசி மற்றும் கர்ப்பகிருஹத்தின் வெளிப்புறத்தை  சற்று நெருங்கி பார்த்தால் விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களையும் குறிப்பிடும் வகையில் நரசிம்மர், வேணுகோபாலா, காளியா – மர்தனா, ஹயகிரீவா, கோவர்தனதாரி, லஷ்மிநாராயணா போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed