Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » ஈர்க்கும் இடங்கள் » சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷன்

சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷன், சிக்மகளூர்

48

சிக்மகளூருக்கு வருகை தரும் பயணிகள் இங்கு 1915 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட CCRI என்று அழைக்கப்படும் செண்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷனுக்கும் சென்று பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த CCRI அமைப்பு கொப்பா லேபரேட்டரியில் காபி செடிகளில் ஏற்பட்ட ஒரு நோயை பற்றி ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.  130 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆய்வு பண்ணையில் 80.26 ஹெக்டேர் பரப்பில் காபி தோட்டம் அமைந்துள்ளது.  இதில் 28.94 ஹெக்டேருக்கு ரோபஸ்டா வகை காப்பியும் 51.32 ஹெக்டேர் பரப்பில் அராபிகா வகை காப்பியும் பயிரிடப்பட்டுள்ளது.

சிறிது காலத்துக்கு பின்னர் இந்த ஆய்வுக்கூடம் நிரந்தரமாகவே காபி தோட்டங்கள், காபி விதைகள், பயிர் செய்யும் முறைகள் போன்றவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்யும் ஒரு நிலையமாகவே மாற்றப்பட்டது.

அத்துடன் 1925ம் ஆண்டில் இந்த ஆய்வு நிலையத்தை மைசூர் காபி ஆராய்ச்சி நிலையம் என்றும் அப்போதைய மைசூர் அரசாங்கம் மாற்றியது.  பின்னர் பாக்கு மற்றும் மிளகு போன்ற பயிர்களையும் இது  விற்பனை செய்யத்தொடங்கியது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நீர்த்தேவைகளுக்காக ஒரு சிறு நீர்த்தேக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷன் வளாகத்தில் நர்சரி, கட்டிடங்கள், சாலைகள் விரிவுபடுத்தப்பட்ட பண்ணைகள் போன்றவை உள்ளன. இங்கு வரும் பயணிகள் எதியோப்பியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாவர வகைகள் மற்றும் விதைக்கன்றுகள், விதை வங்கி போன்றவற்றைக் காணலாம்.

ஒரு அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வுக்கூடமும் காபி தோட்டங்கள் மற்றும் அது தொடர்பான இதர துறைகளுக்கான நூல்களுடன் கூடிய ஒரு நூலகமும் இங்கு உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Aug,Fri
Check Out
22 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat