கௌமுக் குண்ட் எனும் இந்த நீர்த்தேக்கம் புகழ்பெற்ற சித்தோர்கர் கோட்டையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. கௌமுக் எனும் சொல்லுக்கு ‘பசுவின்வாய்போன்ற’ என்பது பொருளாகும். பாறைகளின் இடையே உள்ள வெடிப்புகளின் வழியே ஓடி வரும் நீரானது இறுதியில் இந்த நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இந்த கௌமுக் குண்ட் தீர்த்தத்தில் உள்ள மீன்களுக்கு சுற்றுலாப்பயணிகள் தீனி போட்டு மகிழ அனுமதிக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகிலேயே உள்ள ராணி பிந்தர் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
உள்ளூர் கதைகளின்படி, இந்த சுரங்கப்பாதையானது சித்தோர்கர் ராணி பத்மினி ‘ஜௌகார்’ (கௌரவத்தற்கொலை)செய்துகொண்ட பாதாள அறை வரை செல்வதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications