ராஜபுதன இளவரசியான மீராபாய்’க்காக இந்த மீரா கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் தன் ராஜ சௌகரியங்களை எல்லாம் மறுத்து கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் கழித்த பெண் பக்தையாக அறியப்படுகிறார்.
மீரா பாய் தன் வாழ்நாள் முழுக்கவே பஜனைகளைப் பாடுவதிலும் கிருஷ்ண பஹவானைத் துதிப்பதிலும் கழித்துள்ளார். ராஜபுதன கட்டிடக்கலையின் ஒரு அற்புதமான மாதரிவடிவமாக இந்த மீராபாய் கோயிலைச்சொல்லலாம்.
இது கும்பா ஷியாம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. வட இந்திய கட்டிடக்கலை பாணியை இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலைச்சுற்றிலும் உள்ள நான்கு திறந்த மாடங்கள் காணப்படுகின்றன. மேலும் கோயிலின் உட்பகுதியை கலையம்சம் நிறைந்த மீரா மற்றும் கிருஷ்ணர் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.



Click it and Unblock the Notifications