மௌரிய சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாக விளங்கிய இந்த நாக்ரி எனும் நகரம் சித்தோர்கரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இது பய்ராச் நதிக்கரயில் அமைந்துள்ளது.
முற்காலத்தில் மத்யாமிகா என்ற பெயரால் அறியப்பட்ட இந்நகரம் மௌரியார் ஆட்சிக்காலத்திலிருந்து குப்தர் காலம் வரை செழிப்புடன் திகழ்ந்துள்ளது. சமீப காலத்தில் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் பலனாக பல வியக்க வைக்கும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஹிந்து மற்றும் பௌத்த பாரம்பரியங்களுடன் இந்த ஸ்தலம் கொண்டிருக்கும் நெருங்கிய உறவை அவற்றுள் முக்கியமானதாக சொல்லலாம். சுடுமண் ஓடுகளுடன் காணப்படும் ஒரு ஸ்தூபி ஒன்றும் இந்த வரலாற்றுத்தலத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications