கர்ராஜபுதன மன்னரான மஹாராணா கும்பா வசித்த ஒரு வரலாற்றுச்சின்னம் இந்த ராணா கும்பா அரண்மனை ஆகும். 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கம்பீரமான அரண்மனை இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
ராஜபுதன வம்சத்தாரின் கட்டிடக்கலை அறிவின் உச்சத்தை பறைசாற்றும் இது சுற்றுலாப்பயணிகளிடையே மிகப்பிரசித்தமான ஸ்தலமாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் ராணி பத்மினி தன் அந்தப்புர பெண்களுடன் ‘ஜௌகார்’ எனப்படும் ‘கௌரவத்தற்கொலை’ புரிந்து கொண்ட பாதாள அறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எதிரிகளின் கைகளில் சிக்கி மானத்தை இழக்காமல் இருக்க அக்கால ராஜகுல மகளிர் இந்த ‘ஜௌகார்’ எனும் முடிவை தேர்ந்தெடுக்கும் வழக்கம் வரலாற்றுகால மரபில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனைக்கு அருகிலேயே சிவனுக்கான கோயில் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த அரண்மனை வளாகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக ‘ஓலி-ஒளி’ காட்சி விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications