சத்பிஸ் தேவ்ரி கோயில் என்பது ஜெயின் இன மக்களின் புனித திருக்கோயிலாகும். இது மோகன் மாக்ரி எனும் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. இந்த மோகன் மாக்ரி கட்டமைப்பானது முகலாயப்பேரரசரான அக்பர் இப்பகுதியின்மீது 1567ம் ஆண்டு படையெடுத்தபோது எழுப்பப்பட்டுள்ளது.
பீரங்கிகள் மூலம் நேரடியாக சித்தோர்கர் கோட்டையை தாக்குவதற்கு வசதியான உயரத்தில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சத்பிஸ் தேவ்ரி கோயிலானது ஜைன மரபின் அற்புதமான பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோயிலில் காணப்படும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் பக்தர்களைப் பெரிதும் கவர்கின்றன. துல்ஜா பவானி கோயில், சிங்கார் சௌரி மற்றும் நௌலாக்கா பந்தர் போன்ற இதர அம்சங்களையும் மோகன் மாக்ரி வளாகத்தில் பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications