பிளாக் தண்டர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்கா ஆகும். இது கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இது மிகப் பெரியதாகவும் அதிக இடவசதி கொண்டதாகவும் உள்ளது. 49 வகையான கிளர்ச்சியூட்டும் வேடிக்கை சவாரிகள் கொண்டுள்ளது. இங்கு அதிகப் புகழ் பெற்ற சவாரிகள் காட்டாற்று சவாரி மற்றும் மலையுலா சவாரி ஆகியன.
இதன் வளாகத்தினுள் ஒரு ஹோட்டலும் அமைந்துள்ளது. இரவு தங்க விரும்புபவர்கள் இதை உபயோகித்துக் கொள்ளலாம். பலர் இந்தப் பூங்காவில் தங்குவதை விரும்புகின்றனர். காரணம் அவர்கள் இங்குள்ள சவாரிகளில் விளையடுவதோடு இதன் கண்கவர் சூழல்களை ரசிக்கவும் விரும்புகின்றனர்.
இந்தப்பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் அதன் தேயிலை, காப்பித்தொட்டங்களின் அழகான காட்சியமைப்பு இங்கிருந்து காணக் கிடைப்பதால் இந்த சுற்றுப்பகுதியின் அழகு இன்னமும் மெருகூட்டப்படுகிறது.
நுழைவுக் கட்டணம் பத்து வயதுக்கு மேலான பெரியவர்களுக்கு ரூ. 450, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 400.



Click it and Unblock the Notifications