சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றி உள்ள பல வகையான பூக்கள் மற்றும் தாவரங்களால் இது இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புகழ் பெற்ற இடமாக உள்ளது.
இதைச் சுற்றிலும் உள்ள புல்வெளிகளை இருப்பிடமாகக் கொண்டு வாழும் பறவையினங்களால், பறவைகளைப் பார்க்கவருபவர்களுக்கு இந்த ஏரி சொர்க்கமாக தெரிகிறது. இந்த இடத்திற்கு கிட்டத்தட்ட நூறு வகையான பறவைகள் வழக்கமாக வருவதாக நம்பப்படுகிறது.
வசந்த காலத்தில் இங்கு பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் இந்த இடம் பரபரப்பாக காணப்படும். உலகெங்கிலும் இருந்து பறவை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் அரிய ,அபூர்வ பறவைகளை காண வருகிறார்கள். எக்ரெட் , ஹெரான் , ஸ்டார்க் , இபிஸ் , ஸ்பூன் பில் , கைட் , ஹாரியர் , டீல் முதலியன இங்கு வரும் பறவைகளுள் சிலவற்றின் வகையாகும்.



Click it and Unblock the Notifications