இந்த கம்பீரமான கூச் பிஹார் ராஜ்பரி எனும் அரண்மனை கூச் பிஹார் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாகவும் நகரத்தின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
செங்கற்களால் கட்டப்பட்டு வெண்ணிற தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனை ஒரு காலத்தில் ராஜ வம்சத்தினரின் இருப்பிடமாக திகழ்ந்திருக்கிறது.
தற்போது நாம் காணும் கூச் பிஹார் நகரத்தின் வடிவமைப்பை நிறுவிய பெருமை இந்த ராஜ வம்சத்தினரையே சேரும். அவர்களுக்கு அடுத்ததாக ஆங்கிலேயர்கள் இந்த ராஜ்பரியை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த அரண்மனை மாளிகை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு நகரத்தின் பாரம்பரிய வரலாற்றை எடுத்துக்கூறும் சின்னமாக விளங்கிவருகிறது.



Click it and Unblock the Notifications