கஜ்ஜார், டல்ஹெளசி

கஜ்ஜார், சாகசத்தை விரும்புபவர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய இந்த இடத்தை, காலாடாப்பில் இருந்த 3 நாள் மலையேற்றம் செய்வதன் மூலம் அடைந்து விட முடியும். இந்த 3 நாள் மலையேற்றப் பயணத்தின் போது பயணிகள் வெண்பனி மூடிய நிலப்பகுதிகளின் அழகில் தங்களையே மறந்திடுவார்கள்.

சாகச விரும்பிகள் பனி மூடிய இந்த சமவெளிப் பகுதிகளில் குதிரை சவாரி, புகைப்படம் எடுத்தல் மற்றும் வேறு சில செயல்களையும் செய்ய விரும்புவார்கள். அதிகமான பனிப்பொழிவின் காரணமாக இங்கு ஓடிக் கொண்டிருந்த ஓடைகள் பனியால் மூடப்பட்டு தற்காலிக பாலங்களாக இயற்கையாகவே மாறியுள்ளதைக் காண்பது அரிய காட்சியாக இருக்கும். இந்த இடத்திற்கு வருபவர்கள் அது கோடைகாலமாக இருந்தாலும் மொத்தமான கம்பளி போர்வைகளை கொண்டு வருவது நன்மையாக அமையும்.

Please Wait while comments are loading...