செயின்ட் பிரான்சிஸ் சர்ச், 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இடம் டல்ஹெளசி நகரில் பார்க்கத் தகுந்த இடமாகும். இந்த கட்டிடம் இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற ‘சர்ச் ஆஃப் இங்கிலாந்து-ன் அமைப்பை போன்றே வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சர்ச்சை கட்டுவதற்கான முதலீடு இந்த பகுதிகளில் வசித்து வந்த ராணுவ வீரர்களாலும் மற்றும் பொதுமக்களாலும் கொடுக்கப்பட்டது.
இதன் பராமரிப்பை ஜலந்தரைச் சேர்ந்த கத்தோலிக்க டையோசீஸ் செய்து வருகிறது. சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மற்றும் கண்கவரும் கண்ணாடி வேலைப்பாடுகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகள் இந்த தேவாலயத்தை பார்வையிடுவதற்கு சிவப்பு கம்பளமிட்டு வரவேற்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு செய்யப்படும் பிரார்த்தனைக் கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
டல்ஹெளசியில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள இந்த தேவாலயம், சுபாஷ் சௌக்கிற்கு அருகில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் பஸ்கள் அல்லது டாக்ஸிகள் அல்லது நடைபயணத்தின் மூலம் இவ்விடத்தை அடைந்திட முடியும்.
இந்த தேவாலயத்தை முழுமையாக பார்வையிட குறைந்தது 1 மணி நேரம் ஆகும். செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச் மற்றும் சுபாஷ் பாவ்லி ஆகியவை இதன் அருகாமையில் உள்ள பிற பார்வையிடத் தகுந்த இடங்களாகும்.



Click it and Unblock the Notifications