சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. 1607-ம் ஆண்டில் அப்போதைய போர்த்துகீசிய கவர்னர் மற்றும் தளபதியாக இருந்தவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இதன் நுழைவாயில் அமைப்பாகும். ஒரு அழகான சிலுவை மற்றும் மலர் அலங்கார அம்சங்கள் ஆகியவற்றோடு போர்த்துகீசிய மொழியில் சில குறிப்புகளும் இதில் காணப்படுகிறது.
மரத்தால் ஆன அமைப்பில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு மணியையும் இந்த வாசல் அமைப்பில் காணலாம். ஆலயத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பூசப்பட்டிருக்கும் அதே வண்ணம் இந்த மணியின் மீதும் பூசப்பட்டிருக்கிறது.
சுவரை ஒட்டியவாறு காணப்படும் ஒரு சிறிய குகை போன்ற உள்ளறை அமைப்பில் அன்னை மேரியின் உருவத்தோற்றம் பொதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பானது பைஸன்டீன் மற்றும் காதிக் கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆலயத்தின் பிரதான பீடப்பகுதியில் காணப்படும் அலங்கார வடிப்புகள் மற்றும் சித்திரப்பொறிப்புகள் 17ம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கின்றன.
மேலும் பிரார்த்தனை கூடத்தின் சுவர்களில் செதுக்கப்பட்ட உருவச்சிலைகளும் பொதிக்கப்பட்டிருக்கின்றன. இவை யாவும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தினை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications