‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’ எனும் இந்த தேவாலயம் மோதி தமன் பகுதியில் அமைந்துள்ளது. போம் ஜீசஸ்’க்காக எழுப்பப்பட்டுள்ள இந்த தேவாலயம் 1559ம் ஆண்டில் கட்டத்துவங்கப்பட்டு 1603ம் ஆண்டில் திறக்கப்பட்டிருக்கிறது. போர்த்துகீசிய குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில் இது ஒரு பாரிஷ் சர்ச் ஆக விளங்கியிருக்கிறது.
அக்காலத்திய போர்த்துகீசிய கட்டிடக்கலை நுணுக்கங்கள் மற்றும் கலைஞர்களின் கைத்திறனுக்கான சிறந்த உதாரணமாக இந்த சர்ச் வீற்றிருக்கிறது. இதில் காணப்படும் அலங்கார அம்சங்கள் மற்றும் நுணுக்கமான வடிவமைப்புகள் ரோமானிய மற்றும் போர்த்துகீசிய கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கின்றன.
தங்க நிற மரப்பீடம், கலையம்சம் நிரம்பிய வாசல் அமைப்புகள், நுணுக்கமான வடிவமைப்புகள் கொண்ட உட்கூடங்கள், உயர்ந்த உட்கூரைகள் மற்றும் விரிவான மர வேலைப்பாடுகள் போன்றவற்றை இந்த தேவாலயத்தில் பார்வையாளர்கள் ரசித்து மகிழலாம்.
ரோமன் கத்தோலிக்க பாணியில் வடிக்கப்பட்டுள்ள ஆறு குருமார்களின் அழகிய சிலைகள் இங்கு பார்வையாளர்களை கவரும் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’ தமன் பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. வெகு தூரத்திலிருந்தும் யாத்ரீகர்களும் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் இந்த தேவாலயத்தை தரிசிக்க வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications