செயிண்ட் ஜெரோம் ஃபோர்ட் அல்லது நனி தமன் ஃபோர்ட் என்று அழைக்கப்படும் இந்த கோட்டை தமன் கங்கா ஆற்றின் வடக்குக்கரையில் நனி தமன் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
சிறிய கோட்டையாக காட்சியளித்தாலும் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஒரு பிரம்மாண்ட நுழைவாயிலை இது கொண்டுள்ளது. 12250 ச.மீ பரப்பளவில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மரபை சேர்ந்த செயிண்ட் ஜெரோம் எனும் குருவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
செயிண்ட் ஜெரோம் குருவின் பிரம்மாண்ட சிலையொன்று நுழைவாயில் பகுதியிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் லேடி ஆஃப் தி சீ எனும் கத்தோலிக்க சர்ச் ஒன்றும் இந்த கோட்டை வளாகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டைக்கு இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று கடலை நோக்கியும் மற்றொன்று நனி தமன் பகுதியில் திறக்கும்படியாகவும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications