போஸ்ஹின என்பது ஒரு கிராமம் ஆகும். இது ஸபார்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜியில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் பழங்குடியின பண்பாட்டை அனுபவித்து மகிழ உதவும் ஒரு சிறந்த இடமாகும்.
இங்கு ஒரு காலத்தில் அரண்மனையாக இருந்த டார்பார்கார்க் போஸ்ஹின, பழங்கால நினைவுச் சின்னங்களுடன் நவீன வசதிகள் கலந்த ஒரு பாரம்பரிய வீடாக அறியப்படுகிறது.
இங்கு பாரம்பரிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள சமையல் அறையில் தங்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சித்ரா-விசித்ரா பண்டிகை இந்தக் கிராமத்தின் மற்றொரு சிறப்பாகும். இந்தப் பண்டியை ஹோலிப் பண்டிகைக்கு பின் சுமார் இரண்டு வாரங்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்பகிறது.



Click it and Unblock the Notifications