Search
  • Follow NativePlanet
Share

தண்டேவாடா – பழமையின் மணம் வீசும் சிறு நகரம்!

13

தண்டேவாடா எனும் இந்த சிறு நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தர் மண்டலத்தில் அமைந்திருக்கிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் தண்டேவாடா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது இயங்குகிறது. ஆதிகாலத்தில் இப்பகுதியை ஆண்ட ராஜ வம்சத்தினரின் தலைநகராகவும் இது திகழ்ந்திருக்கிறது.

தண்டேவாடா மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

அற்புதமான இயற்கை எழிற்காட்சிகள், வரிசையாய் மடிந்து கிடக்கும் மலைத்தொடர்கள் போன்ற எழில் அம்சங்களுடன் இந்த தண்டேவாடா மாவட்டம் வீற்றிருக்கிறது. சிறப்பான வரலாற்று பின்னணியை கொண்டுள்ள இந்த பூமியில் பல பழமையான கோயில்களையும் பார்க்க முடிகிறது.

தண்டேஷ்வரி எனும் உள்ளூர் குல தெய்வத்தின் பெயராலேயே இந்நகரம் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  இந்த தண்டேஷ்வரி கோயில் தண்டேவாடாவின் அடையாளமாக வீற்றிருக்கிறது.

இது தவிர பைலாடிலா, பர்சூர், பிஜாப்பூர், கம்மவாடா நினைவுத்தூண்கள், போத்காட் சாத் தர் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

தண்டேவாடாவின் கலாச்சாரம்!

தண்டேவாடா மக்கள் பெரும்பாலும் முரியா மற்றும் தண்டமி மரியா எனும் பழங்குடி இனப்பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த மாவட்டத்தை சுற்றி ஆந்திரம் மற்றும் ஒரிஸா மாநிலப்பகுதிகள் சூழ்ந்திருந்தாலும் தண்டேவாடா தனது பூர்வகுடி கலாச்சாரத்தை இழக்காமல் தனித்தன்மையோடு காட்சியளிக்கிறது.

இம்மக்கள் பெரும்பாலும் அசைவ உணவுப்பிரியர்களாக உள்ளனர். கற்கள் மற்றும் இயற்கைப்பொருட்களால் உருவாக்கப்பட்ட பழங்குடி ஆபரணங்களை மட்டுமே இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் விரும்பி அணிகின்றனர். ஹோலி மற்றும் துஷேரா போன்ற எல்லா முக்கிய ஹிந்து பண்டிகைகளையும் இப்பகுதி மக்கள் விரும்பி கொண்டாடுகின்றனர்.

எப்படி செல்லலாம் தண்டேவாடாவுக்கு?

விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான எல்லா போக்குவரத்து வசதிகளை இந்த மாவட்டம் வாய்க்கப்பெற்றுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ராய்பூரில் உள்ளது.

தண்டேவாடா சிறப்பு

தண்டேவாடா வானிலை

சிறந்த காலநிலை தண்டேவாடா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தண்டேவாடா

  • சாலை வழியாக
    தண்டேவாடா நகரம் மாநில நெடுஞ்சாலை 16 மூலமாக ஜக்தல்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் ராய்பூர், பிலாஸ்பூர் மற்றும் துர்க் நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தண்டேவாடாவுக்கு அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையமாக 97 கி.மீ தூரத்தில் ஜக்தல்பூர் ரயில் நிலையம் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரின் விமான நிலையம் தண்டேவாடாவுக்கு அருகில் உள்ளது. இந்தியாவின் முக்கிய மாநகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City