தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள தாராசுரம் நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் தான் திருநல்லூர். இவ்வூரில், கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை, கல்யாண சுந்தரேஸ்வரர் என்று பக்தியோடு வழிபடுவர். சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இக்கோவிலைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டுச் செல்கின்றனர்.
தாராசுரம் நகரிலிருந்து பேருந்தின் மூலம் திருநல்லூரை எளிதில் அடையலாம். ரயில் வழியாக சுந்தரபெருமாள் கோவில் ஸ்டேஷனில் இறங்கி, அருகில் இருக்கும் திருநல்லூரை சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications