Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» தேவராயனதுர்க்கா

தேவராயனதுர்க்கா – மலைகளின் நடுவே ஒரு பயணம்

11

அடர்ந்த பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ள தேவராயனதுர்க்கா எனும் இந்த மலைவாசஸ்தலம் விடுமுறைச்சுற்றுலாவுக்கான இனிமையான மலைநகரமாக அறியப்படுகிறது. 3940 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை வாசஸ்தலம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையைப்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேவராயனதுர்க்கா நகரம் இங்குள்ள கோயில்கள், வனப்பகுதி மற்றும் அற்புதமான இயற்கை எழில் காட்சிகளுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது.

வரலாற்றுக்காலத்தில் உடையார் வம்சத்தினரால் ஆளப்பட்டுள்ள தேவராயனதுர்க்கா நகரமானது சிக்க தேவராஜ உடையார் என்ற மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் இந்த பகுதியை ஆண்ட ஜடகா என்ற உள்ளூர் ஜமீனிடமிருந்து இந்த நகரத்தை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.

தேவராயனதுர்க்காவின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்கள்

இந்த மலை வாசஸ்தலத்தில் முக்கிய கோயில்களாக போகநரசிம்மர், யோகநரசிம்மர் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்கள் போன்ற மூன்று கோயில்கள் மூன்று உயரங்களில் காணப்படுகின்றன.

இவற்றில் போகநரசிம்மர் கோயில் அடிவாரத்திலும், யோகநரசிம்மர் கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பாதி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலை நகரத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக நாமட சிலுமே எனப்படும் அதிசய நீரூற்று பிரபல்யமாக அறியப்படுகிறது. இந்த நீரூற்று ராம்பிரானின் அம்பு இங்குள்ள பாறையை துளைத்ததால் ஏறபட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

இந்த நீரூற்றுக்கருகில் ராமரின் பாதச்சுவடுகளும் தென்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்குள்ள காடுகளில் பல அபூர்வ மூலிகைச்செடிகள் பயிராகின்றன. மேலும் ஷீ நரசிம்ம ஜயந்தி திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெங்களூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் இந்த தேவராயன துர்க்கா அமைந்துள்ளது. இதன் அருகில் தும்கூர் ரயில் நிலையம் உள்ளது. பேருந்து வசதிகளும் ஏராளம் உள்ளன.

தேவராயனதுர்க்கா சிறப்பு

தேவராயனதுர்க்கா வானிலை

சிறந்த காலநிலை தேவராயனதுர்க்கா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தேவராயனதுர்க்கா

  • சாலை வழியாக
    பெங்களூரிலிருந்து அரசு மற்றும் தனியார் சொகுசு மற்றும் குளிர் சாதன பேருந்துகள் தேவராயனதுர்க்கா மலைநகரத்துக்கு அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தும்கூர் ரயில் நிலையம் தேவராயனதுர்க்கா மலைநகரத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களான பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் மைசூர் போன்றவற்றுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளது. இங்கிருந்து வாடகை டாக்ஸி, வேன் மற்றும் பேருந்து மூலமாக பயணிகள் தேவராயனதுர்க்கா மலைநகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தேவராயனதுர்க்கா மலைநகரத்துக்கு அருகில் 71 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கும், அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கும் விமான சேவைகள் ஏராளம் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jun,Wed
Check Out
11 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu