தேவராயனதுர்க்கா நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த போகநரசிம்மர் கோயிலை தரிசிப்பது அவசியம். இது மலையடிவாரத்திலேயே அமைந்துள்ளது. சோழர் ஆட்சியின்போது கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் லட்சுமி தேவியின் சிலையையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி சிவனின் அவதாரமாக கருதப்படும் துர்வாச முனிவரால் இங்குள்ள போக நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தெய்வம் மைசூர் மன்னர்களின் குல தெய்வமாகவும் இருந்திருக்கின்றது.இந்த கோயிலில் நடத்தப்படும் தேர்த்திருவிழாவின் போது நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுகின்றனர்.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிகழும் பல்குண மாச சுத்த பௌர்ணிமாவின் போது இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த உற்சவத்தின்போது போகநரசிம்மஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக மலைமீதுள்ள ரத பீடத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றார்.



Click it and Unblock the Notifications