'ஆலு கெட்' என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கு தோட்டம் தனௌல்டியிலுள்ள முதன்மை சந்தையின் அருகில் உள்ளது. இந்த தோட்டம் உத்தரகண்ட் அரசாங்கத்துக்கு சொந்தமானது. சூரிய உதயத்தை காண இது மிகவும் உகுந்த இடமாக விளங்குகிறது.
மேலும் இந்த இடத்தில் இருந்து டூன் பள்ளத்தாக்கின் அகலப் பரப்புக் காட்சியையும் பயணிகள் கண்டுக்களிக்கலாம். இந்த இடங்களை சுற்றிப் பார்க்க குதிரைகளை வாடைகைக்கு எடுத்து சவாரி செய்யலாம்.
இங்கு அதிக அளவு உருளைக்கிழங்குகளை விளைவித்து அதை இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது உத்தரகண்ட் அரசு.



Click it and Unblock the Notifications