தேன்கனலில் இருந்து 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலோ. கோலோவில் ஹிந்துக்களின் கோவில்கள் பலவற்றை காணலாம். கனகேஷ்வர், பாலுன்கேஷ்வர், ஸ்ரீ பைத்யாநாத், பஸ்சிமேஷ்வர், கபிலேஷ்வர் போன்ற தெய்வங்களுக்கு இங்கே கோவில்கள் உள்ளன.
இங்குள்ள கோவில்கள் சில அழிந்த நிலையில் இருந்தாலும் இக்கடவுள்களின் ஆசீர்வாதங்களை பெற பக்தர்கள் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஓடிசாவின் கட்டடக் கலையை இங்குள்ள கோவில்களில் கண்டுகளிக்கலாம்.
தொல்பொருளில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த இடம் சுவாரசியமாக அமையும். சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கும் கூட இங்கே உள்ள பழமை வாய்ந்த கோவில்களும் இயற்கை அழகும் லயிக்கச் செய்து விடும். வருடத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த சுற்றுலாத் தலத்திற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications