லெகாய் சேட்டியா மைதாம், லெகாய் சேட்டியா என்ற பெயருடன் ஸ்வர்கோதியோ பிரதாப் சிங்காவின் கீழ் பணியாற்றி வந்த அஹோம் அதிகாரி ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஒரு ஆன்மீக மையமாகும்.
இப்பெரிய “மைதாம்” மன்கோட்டா சாலைக்கு அருகில் செஸ்ஸா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த லெகாய் சேட்டியா மைதாம், ஒரு ஆன்மீக மையமாகவும் கருதப்படுவதால் இது “தான்” என்று அறியப்படுகிறது.
இந்த ஆன்மீக மையத்தின் வளாகத்தினுள்ளே ‘லெகாய்’ என்றழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது. தற்போது இந்த லெகாய் திப்ருகார் மட்டுமல்லாது அஸ்ஸாம் மாநிலம் முழுவதிலுமே புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சேர அடிக்கடி வந்து செல்லும் ஒரு இடமாக விளங்குகிறது.
திப்ருகார் நகரில், லெகாய் சேட்டியா மைதாம் தவிர்த்து, பார்பருவா மைதாம், சோருமெக்லோ மற்றும் போர்மெக்லோ மைதாம், மற்றும் பாஹிகோவா தஷரத் தொவேரா போர்ஃபுகான் மைதாம் போன்ற பிரபலமான மற்றும் பல மைதாம்களும் காணப்படுகின்றன.
வாடகை டாக்ஸிகள் மட்டுமல்லாது ஆட்டோ ரிக்க்ஷாக்களும், நகரப் பேருந்துகளும் இவ்வழியே சென்று வருவதனால், லெகாய் சேட்டியா மைதாமை அடைவது மிகவும் வசதியானதாக உள்ளது.