ராய்டோங்கியா டோலின் சிதிலமடைந்த புராதனக் கட்டிடங்களைச் சென்று பார்க்காமல் திப்ருகார் செல்லும் பயணம் நிறைவடையாது. கலகோவா பகுதியின் லாருவா மௌஸாவில் உள்ள ராய்டோங்கியா டோலுக்கு, வாடகை டாக்ஸிகள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் மூலம் எளிதாகச் செல்லலாம்.
ராய்டோங்கியா டோல், அஹோம் ராஜ்யத்தைச் சேர்ந்த ஏராளமான நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இதன் சுவர்களில் காணப்பட்ட சிலைகள் பல சிதிலமடைந்திருந்தாலும், தற்போது 14 சிலைகள் இங்கு காணப்படுகின்றன. முன்னர் 24 சிலைகள் இங்கு இருந்ததாக நம்பப்படுகிறது.
சரித்திரச் சான்றுகளின் படி, இந்த டோல் மற்றும் அதனோடு இணைந்துள்ள குளம் மற்றும் 200 புரா ஆகியவை, ஸ்வர்கதியோ ப்ரமத்தா சிங்கா என்பவரால், அவரது தங்கைக்கும், ராய்டோங்கியா பருவா என்பவருக்கும் இடையே நடைபெற்ற திருமணத்திற்கு வரதட்சணையாக வழங்கப்பட்டவையாகும்.
இன்று ராய்டோங்கியா டோல் அதன் அருகில் உள்ள குளத்தோடு சேர்ந்து, திப்ருகார் வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவல்ல கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகிறது. நீங்கள் திப்ருகார் சென்றால் இந்த டோலிற்கு கட்டாயம் சென்று வாருங்கள்.



Click it and Unblock the Notifications