சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி, தியூ

முகப்பு » சேரும் இடங்கள் » தியூ » ஈர்க்கும் இடங்கள் » சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி

தியூ நகரத்திலுள்ள பழமையான சர்ச்சுகளில் ஒன்றான இந்த சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி 1593ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த செயிண்ட் ஃப்ரான்சிஸ் மதகுருவின் நிஜப்பெயர் கியோவானி டி பியட்ரோ டி பெர்னார்டோன் என்பதாகும்.

இவர் ஒரு கத்தோலிக்க மதப்பிரச்சாரகர் ஆவார். பின்னாளில் ஒன்பதாம் போப் கிரிகரி 1228ம் ஆண்டில் இவருக்கு செயிண்ட் குரு பட்டம் வழங்கியுள்ளார்.

பிராணிகள் மற்றும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த இந்த மதகுரு அக்காலத்தில் மிகுந்த புகழுடன் விளங்கியுள்ளார். ஒரு மலையுச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்ச் பிரம்மாண்டமாக பரந்திருக்கும் அரபிக்கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறது.

இப்பகுதியின் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சுகளில் ஒன்றாக இந்த சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி புகழ் பெற்றிருக்கிறது.

இந்த தேவாலயத்தின் கட்டுமானமும் வடிவமைப்பும் ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. படிக்கட்டுகளில் ஏறி சென்றடையும்படியாக இரண்டு நுழைவாயில் அமைப்புகளை கிழக்கு மற்றும் வடக்குப்பகுதியில் இந்த தேவாலயம் கொண்டுள்ளது.

இன்றும் பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்தப்படும் இந்த பழமையான ஆலயத்தின் ஒரு சிறு பகுதி மட்டும் மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

Please Wait while comments are loading...